இது கொரோனா தொற்று காலம்.! தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலை ரொம்ப சங்கடமாக இருக்கு.! இப்டி பண்ணிடாதீங்க.. அமைச்சர் வேண்டுகோள்.!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகளும் கல்லூரிகளும் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் அனைத்தும் ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டதால் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் நீடித்தது.
இதன்காரணமாக தனியார் பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் தராமல் பள்ளி நிர்வாகங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 2 முதல் 3 லட்சம் பேர் வரை இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக அவர்களில் பலர் பொருளாதார சிக்கல்களை சந்திப்பதாக புகார்கள் வருகின்றன.
எனவே தற்போதைய நோய்த்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களை கைவிட்டுவிடாதீர்கள் என்று தனியார் பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். வரலாறு, அறிவியல் ஆசிரியர் பெயிண்டராகவும், பேக்கரியில் வேலைபார்ப்பதாகவும் கூறுவது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே இவ்வாறு அதிகபடியான ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் இருந்தால், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளார்.