#Breaking: சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு.!
#Breaking: சாத்தனூர் அணை திறப்பு விவகாரம்; எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் மறுப்பு.!
பெஞ்சல் புயல் மழை காரணமாக 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் நீர் நிரம்பியதைத்தொடர்ந்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. முதல் நாளில் 30 ஆயிரம் கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்தடுத்த மழை காரணமாக 2 இலட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் உள்ள தென்பெண்ணையாறு கடும் வெள்ளத்தை சந்தித்தது. இதற்கு அணையில் திடீரென நீரை திறந்ததே முக்கிய காரணம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் குற்றசாட்டு முன்வைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.!
அமைச்சர் விளக்கம்
இந்நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து பொய்க்காவல் பரப்பப்படுகிறது. 5 கட்டமாக நீர் திறக்கப்டுவது குறித்து முன்னெச்சரிக்கை வழங்கப்பட்டது. இதனால்தான் பெருமளவிலான வெள்ள சேதம் தவிர்க்கப்ட்டுள்ளது. கரையோர மக்களுக்கு 4 முறை வெள்ள அபாய எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
சாத்தனூர் அணை விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலே பதிவு செய்யப்படுகிறது. அரசின் நடவடிக்கையால் மட்டுமே பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. சிலர் மனசாட்சியை துறந்து புரட்டுகளை பரப்பி வருகிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: தண்ணீர் கேனால் மிகப்பெரிய ஆபத்து; FSSAI அதிர்ச்சி எச்சரிக்கை..!