தமிழக மக்களுக்கு அச்சம் வேண்டாம்.! 3-வது அலை வந்தாலும் அதை சமாளித்துவிடலாம்.!அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமெடுத்து வந்ததால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து கொரோனா பரவல் குறைந்துவந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன, தமிழகத்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை வந்தாலும், அதனை சமாளித்து எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. அதை எண்ணி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டார்.
மேலும், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், தற்போது ஏறத்தாழ 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை என தெரிவித்துள்ளார்.