தாய் இல்லாத பிள்ளைகளாக தவித்து நிற்கும் அதிமுக.. தாய் சென்டிமென்டில் போட்டு தாக்கிய அமைச்சர்..
தாய் இல்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது எனவும், வரும் தேர்தலில் மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்கவேண்டும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தாய் இல்லாத பிள்ளைகளாக அதிமுக உள்ளது எனவும், வரும் தேர்தலில் மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்கவேண்டும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு விழா ஒன்றில் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கட்சியில் கலைஞர் அவர்கள் இல்லாத நிலையில், அதிமுக கட்சியில் ஜெயலலிதா அவர்கள் இல்லாத நிலையில் இரண்டு கட்சிகளும் தங்கள் முதல் சட்டமன்ற தேர்தலை இந்த ஆண்டு சந்திக்க உள்ளன. இதனால் இரண்டு கட்சிகளும் இப்போதில் இருந்தே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றது.
இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் முழு உருவச் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பேசினார்.
அப்போது, "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை புகழ்ந்தும், எதிர்கட்சியானா திமுகவையும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குறித்தும் தாக்கி பேசிய அமைச்சர், இந்த முறை முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் தாயில்லாத பிள்ளைகளாக
அதிமுக உள்ளது. எனவே மக்கள்தான் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என தாய் சென்டிமென்டை முன்வைத்து உருக்கமாக பேசியுள்ளார்..