தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.? பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன்!
minister sengottayan talk about school open
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், தமிழகத்தில் நான்காவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பள்ளி கல்லூரிகளும் ஆரம்பத்தில் இருந்து மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அமைச்சர் பேசுகையில், கோபி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், ரூ.102 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.