ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.! அமைச்சர் அதிரடி.!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரிடம் கடந்த 2018 ஆம் வருடத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றியடைந்த நபர்கள் பணி நியமன ஆணை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், " 2018 ஆம் வருடம் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும் " என்று தெரிவித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போது சில இடங்களில் கணினி பழுது காரணமாக செல்போன் மூலமாக சிலர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் அமைச்சர் விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.