சினிமா மோகத்தால் வந்த விபரீதம்: மகளுக்கு திருமணமான நிலையில் தாய் செய்த காரியம்..!
சினிமா மோகத்தால் வந்த விபரீதம்: மகளுக்கு திருமணமான நிலையில் தாய் செய்த காரியம்..!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (38). இவர் திருப்பூர் தென்னம்பாளையம் காய்கறி சந்தையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (35). இந்ட தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். தனது பணியின் காரணமாக குடும்பத்தினருடன் திருப்பூர் செல்லம் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி சித்ரா டிக்டாக் வலைதளத்தில் வீடியோக்கள் பதிவேறுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்னர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதில் பெரும்பாலான நேரத்தை செலவழித்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு அதிக ஃபாலோயிர்கள் உள்ளனர். மேலும் இவர் அழகாக இருப்பதால் இவருக்கு திரைப்பட துறையில் நண்பர்கள் கிடைத்துள்ளனர்.
திரைத்துறை நண்பர்களுடன் நெருங்கி பழகிய சித்ரா, அவர்களின் உதவியுடன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் குடியேறியுள்ளார். இந்த நிலையில், இவரது மூத்த மகளுக்கு திருமணம் முடிவான நிலையில், கடந்த வாரம் மீண்டும் திருப்பூர் திரும்பி உள்ளார். மகளின் திருமணம் முடிந்து ஒருவாரம் ஆன நிலையில் மீண்டும் சென்னைக்கு புறப்பட ஆய்த்தமாகியுள்ளார்.
இதற்கு அமிர்தலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால், தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அமிர்தலிங்கம், சித்ரா அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அவர், மகளை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்துவிட்டு வா என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக அங்கு சென்ற அவரது மகள், வீட்டில் தனது அம்மா கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து திருப்பூர் மத்திய காவல் நிலையத்திற்கு தனது கணவர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பெருமாநல்லூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அமிர்தலிங்கத்தை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.