ஆம் ஆத்மி வெற்றியால் மகிழ்ச்சியில் ஸ்டாலின், கனிமொழி! திமுகவின் மகிழ்ச்சிக்கு முக்கிய காரணம்!
MK Stalin and Kanimozi apriciate to AAP
டெல்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்று வந்தது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால், மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
டெல்லியில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில், "வகுப்புவாத அரசியலை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் நலனுக்காக கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய அபிலாஷைகள் பலப்படுத்தப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் தி.மு.க மகளிரணிச் செயலாளரும் மக்களவை எம்.பி-யுமான கனிமொழி வெற்றிபெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உற்சாகம் அடைந்துள்ளார். ஆம் ஆத்மி வெற்றிக்கு வியூகம் வகுந்து தந்த, பிரசாந்த் கிஷோர், தி.மு.க.,வுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து தர உள்ளது தான், இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.