#Breaking : நகைக்கடன் தள்ளுபடி.! சற்றுமுன் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் ஜாக்பாட் அறிவிப்பு!
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்ச
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்முறை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையிலும் மக்கள் நலத்திட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் . உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.