பிச்சைக்கார மாநிலமா? இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து - மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் கர்ஜனை.!
பிச்சைக்கார மாநிலமா? இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து - மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் கர்ஜனை.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சூரில், மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, அவர் பேசுகையில், தொகுதி மறு வரையறை விஷயத்தில், தமிழ்நாடு 5 தொகுதிகளை இழக்க வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் கேள்வி எழுப்பினாலே தொகுதியை குறைப்போம் என அதிகார செயலை பாஜக கையில் எடுக்கிறது.
இதையும் படிங்க: மகளிர் தின விழா 2025: தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முத்தான அறிவிப்புகள்.. விபரம் இதோ.!
நாகரீகமா?
சமூகநீதியின் வழியில் கிடைக்கும் இடஒதுக்கீடு கொள்கையை தேசிய கல்விக்கொள்கை ஏற்கவில்லை. எங்களின் வரியை வசூல் செய்துவிட்டு, எங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை முடக்குவது நாகரீகமான செயலா?
பாஜக ஆளாத மாநிலத்தை பழிவாங்கும் எண்ணத்துடன் அரசியல் மத்திய அரசால் கையில் எடுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலம் பிச்சையெடுக்கும் மாநிலமா? எங்களின் நிதியை தருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? ரூ.10000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக்கொள்கை எங்களுக்கு வேண்டாம். .
இதையும் படிங்க: #Breaking: மருத்துவமனையில் தயாளு அம்மாள்.. நேரில் வந்த முக அழகிரி.!