கடற்கரை ஓரத்தில் ஒதுங்கிய குப்பைகளை கையால் அள்ளும் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி! வியக்கவைக்கும் வீடியோ!
modi clean debris in beach
பாரத பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று கோவளம் வருகை தருகிறார். இதனையடுத்து கோவளம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் பிரதமர் மோடி தங்கினார்.
இந்நிலையில் நட்சத்திர விடுதி அருகே உள்ள கடற்கரை பகுதிக்கு இன்று காலை சென்ற அவர், கடற்கரை பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு கரையோரம் ஒதுங்கிய பிளாஸ்டிக் குப்பைகளை கைகளால் அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
நீண்ட நேரம் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி கடற்கரையில் சேகரித்த குப்பைகளை ஓட்டல் ஊழியரிடம் தந்ததாக அவரது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பொது இடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாக வைக்கவும், உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உறுதியேற்போம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.