கொரோனா தடுப்பு எப்போது கிடைக்கும்.? சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!
modi talk in independence day function
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் நாட்டின் 74-வது சுதந்திர தின கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க டெல்லி மற்றும் காஷ்மீர் எல்லையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையை செங்கோட்டையில் தொடங்கினார். அதில், “எல்லை கட்டுப்பாட்டு பகுதி, உண்மையான எல்லைக்கோடு வரை நாட்டின் இறையாண்மையை சவால் செய்தவர்களுக்கு இந்தியாவின் ராணுவ வீரர்கள், பொருத்தமான பதிலை அளித்திருந்தனர் என பெருமையுடன் குறிப்பிட்டார்.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் குழந்தைகளை காண முடியவில்லை. நாட்டில் பல்வேறு இடங்களில் மழை, நிலச்சரிவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது. மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசும் அயராது பணியாற்றி வருகிறது. இந்த தருணத்தில் கொரோனா முன்கள பணியாளர்களை நினைவு கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு மருந்து மிக விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன எனவும் தெரிவித்தார்.