அவிநாசி விபத்து குறித்து பிரதமர் மோடியின் சோகமான ட்விட்டர் பதிவு!
Modi twit about avinasi accident
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கோர விபத்து ஏற்பட்டு பலர் பலி ஆகியுள்ளனர். பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள மாநில அரசு சொகுசு பேருந்தும், கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் இன்று அதிகாலை 3 மணி அளவில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
அங்கு நடந்த கோர விபத்தில், பேருந்து நிலைகுலைந்து பேருந்தில் பயணம் செய்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அவிநாசி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில், ‘‘திருப்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்து குறித்த தகவலறிந்து ஆழ்ந்த துயரமடைந்தேன். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.