×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொலைகாரிகளாக மாறும் தாய்மார்கள்! குடும்ப சண்டைக்காக பெற்றகுழந்தைகளை கொலை செய்த அவலம்!

Mom killed two children due to family fight

Advertisement

கள்ளக்காதல், குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தைகளை தாயே கொலை செய்யும் கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் குடும்ப தகறாரு காரணாமாக பெற்ற தாயே இரண்டு குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை அடுத்துள்ள பசலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவரது மனைவி செல்லம்மாள்(28). இவர்களுக்கு பொன்னர் (5), பெரியக்காள் (2) ஆகிய 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டை வருவதும் பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்வதும் இப்படியே நீண்ட நாட்களாக தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான செல்லம்மாள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தான் இறந்தபிறகு குழந்தைகளை யார் வளர்ப்பர் என்று எண்ணிய செல்லம்மாள் அவர்களையும் கொலைசெய்ய முடிவு செய்துள்ளார்.

செல்லம்மாள், சனிக்கிழமை கணவர் வெளியே சென்ற பின் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, செல்லம்மாளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், அருகில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு கிணற்றை நோக்கி ஓடிச் சென்றனர். அப்போது தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த செல்லம்மாளையும் அவரது இரு குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர்.

பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#mom killed child #murder case #suicide attempt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story