காவேரி டெல்டா விவசாயிகள் மனம் குளிரும்படி வெதர்மேன் வெளியிட்ட இன்பசெய்தி! நினைப்பது நிறைவேறுமா?
monsoon in Cauvery catchment areas
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக கேரளா மாற்று தமிழகத்தின் ஒரு சில தென் மாவட்டங்களில் ஏற்கனவே பருவமழை பெய்ய துவங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தின் காவேரி டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இதுவரை பருவமழை துவங்கியபாடில்லை. இந்நிலையில் காவேரி டெல்டா விவசாயிகள் மனம் குளிரும்படி தமிழ்நாடு வேதேர்மன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி பகுதியில் நேற்று இரவு விடிய, விடிய மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நாகையில் வேதாரண்யம் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசுவதால் இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில், அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் சீற்றத்தால் அடுத்த சில நாட்களுக்கு என்ன நடைபெறும் என தமிழ்நாடு வேதேர்மன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "அரபிக்கடலில் உருவாகியுள்ள கடல் சீற்றத்தால் கர்நாடகா, கோவா மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும்.
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு, கேரளாவின் வயநாடு ஆகிய பகுதிகளில் முதல் சுற்றில் னால மழை பெய்யும். இதனால் காவேரி ஆற்றில் அதிகமான நீர் வர வாய்ப்புள்ளதாக காவேரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கலாம். மேலும் தமிழகத்தில் கன்னியாகுமாரி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சியில் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாம்.
திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் கன்னியாகுமாரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.