அந்தோ.. பரிதாபம்... பிரசவத்தில் தாய், சேய் பலி.! அரசு மருத்துவமனை மீது புகார்.!
அந்தோ பரிதாபம்... பிரசவத்தில் தாய், சேய் பலி.!! அரசு மருத்துவமனை மீது புகார்.!!
வேலூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை செய்ததில் தாய் மற்றும் சேய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காவலரின் மனைவி கர்ப்பம்
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மனைவி அனிதா. கோடீஸ்வரன் தமிழக காவல்துறையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி அனிதா கர்ப்பமாக இருந்திருக்கிறார். இதற்காக வேலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வந்துள்ளார்.
பிரசவத்தின் போது மரணம்
நிறை மாத கர்ப்பிணியான அனிதாவை நேற்று பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இன்று அறுவை சிகிச்சை மூலம் அனிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்தே பிறந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அனிதாவும் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: போதை வெறியில் மகன் படுகொலை.!! தந்தை சரண்.!!
குடும்பத்தினர் போராட்டம்
அனிதா மற்றும் அவரது குழந்தையின் இறப்பிற்கு அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களுக்கு நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவமனையில் போராட்டம் செய்ததால் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மீது அனிதாவின் குடும்பத்தார் புகார் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: மச்சினியை வீடியோ எடுத்த மச்சான்... செல்போன் முழுவதும் குளியல் வீடியோக்கள்.!! விசாரணையில் அதிர்ச்சி.!!