கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய தாய், மகன்.! திடீரென மகனுக்கு நேர்ந்த துயரம்.! அதிர்ச்சியில் தாய் மரணம்.!
இந்திய முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பல லட்சம் மக்கள் கொரோனா
இந்திய முழுவதும் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் பல லட்சம் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டும், பல ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தும் வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தாய், மகன் திடீரென உயிரிழந்ததால் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் கணேசன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் மற்றும் அவரது தாய் வள்ளியம்மாள் இருவரும் உடல்நிலை கோளாறு காரணமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் .
அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு பிறகு இருவரும் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி 10 நாட்களுக்கு முன் தான் தாயும், மகனும் வீடு திரும்பினர்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென கணேசன் உயிரிழந்தார். மகன் உயிரிழந்ததைப் பார்த்த அவரது தாய் வள்ளியம்மாளும் அதிர்ச்சியடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தாய், மகன் கொரோனா பாதித்தவர்கள் என்பதால் உறவினர்கள் மட்டுமே அவர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். இச்சம்பவம் ஆரணி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.