ஐயோ.. என் மகள் கஷ்டப்படுறாளே! மனவேதனையில் 4 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்த தாய்! பின் நேர்ந்த ஆச்சர்யம்!
mother gave poision to 4 children for poverity
பீளமேடு பகுதியில் வசித்துவருபவர் கோவிந்தராஜ். இவர் லாரி டிரைவராக உள்ளார். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு சௌமியா, சத்யபிரியா, மணிகண்டன், சபரிநாதன், என்ற 4 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் போதிய வருமானம் இன்றி அவர்கள் கஷ்டப்பட்டு வரும் நிலையில், அம்சவேணியின் இரண்டாவது பிள்ளை சத்யப்ரியா நுரையீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மேலும் வறுமையில் சிக்கி தவிக்கும் அவர்கள் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். நுரையீரல் பாதிக்கப்பட்டு உடல் நலம் சரியில்லாத தனது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என நாள்தோறும் அந்த தம்பதியினர் அழுது, தவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் மனமுடைந்து போன அம்சவேணி தனது கணவர் கோவிந்தராஜன் வெளியே சென்றிருந்த நிலையில், தனது நான்கு பிள்ளைகளுடன் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். மேலும் அரளி விதையை அரைத்து அதனை சாப்பாட்டில் கலந்து தனது பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.
ஆனால் திடீரென மனம் மாறிய அம்சவேணி உடனே ஆட்டோ வரவைத்து தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்கள் ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.