வெட்டவெளியில் பச்சிளம்குழந்தைக்கு பீர் ஊற்றி கொடுத்த தாய்! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!
mother give a beer to baby
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியை சேர்ந்த நடாயி என்ற பெண் இரண்டுதினங்களுக்கு முன்பு அறந்தாங்கி பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கி சென்றுள்ளார்.
அவருக்கு கைகுழந்தையும் இருந்துள்ளது. பேருந்துநிலையத்தில் அவர் குழந்தை முன்பு பீர் குடித்துள்ளார். அவர் குடித்தது மட்டுமல்லாமல் அவரது குழந்தைக்கும் பீரை வாயில் ஊற்றியுள்ளார். பின்னர் இருவரும் போதையில் மயங்கியுள்ளனர். இதனை பார்த்த மக்கள் பேரதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அக்குழந்தையை போதையில் இருந்த தாயிடமிருந்து மீட்டு குழந்தை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
டாஸ்மாக்கிற்கு எதிராக தமிழக பெண்கள் போராடிவரும் நிலையில், இந்த பெண் செய்த செயல் ஒட்டுமொத்த மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.