தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாமியாரிடம் பாலியல் சில்மிஷம் செய்த மருமகன்.. வெந்நீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றிய மனைவி..!!

மாமியாரிடம் பாலியல் சில்மிஷம் செய்த மருமகன்.. வெந்நீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றிய மனைவி..!!

Mother in law killed his son in law Advertisement

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மனைவி டயானா மேரி. டயானா மேரியின் தாயார் இன்னாசி அம்மாள். இவர்கள் மூவரும் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்கள். 

செல்வராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், அவ்வப்போது மதுபானம் அருந்திவிட்டு வந்து மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயத்தை மாமியார் மற்றும் மனைவி பலமுறை கண்டித்தும் பலன் இல்லை. 

இதனால் செல்வராஜின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். கடந்த 5-ஆம் தேதி மதுபோதையில் வீட்டிற்கு வந்த செல்வராஜ் மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் அடுப்பில் வெந்நீர் வைத்து மிளகாய்பொடியை கொட்டி போதையில் படுத்திருந்த செல்வராஜன் மீது ஊற்றியுள்ளனர்.

tamilnadu

இந்த சம்பவத்தில் உடலில் வெந்நீர் பட்டு வெந்து செல்வராஜ் அலரவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின் இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள திருவெறும்பூர் காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி வந்தனர். 

அத்துடன் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்ததால் இதனை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர், டயானா மேரி மற்றும் இன்னாசி அம்மாளை கைது செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #Crime news #mother in law #son in law #Trichy District #திருச்சி மாவட்டம் #Murder #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story