அதிர்ச்சி... பூட்டிய வீட்டிற்குள் துர்நாற்றம்... 6 மாதம் வீட்டிற்குள் முடங்கிய தாய், மகன்... நடந்தது என்ன.?
அதிர்ச்சி... பூட்டிய வீட்டிற்குள் துர்நாற்றம்... 6 மாதம் வீட்டிற்குள் முடங்கிய தாய் மகன்... நடந்தது என்ன.?
புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் தனது மகனுடன் ஆறு மாதங்களாக பூட்டிய வீட்டிற்குள் வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களை மீட்ட காவல்துறையினர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
புதுச்சேரி மாநிலம் ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் தனது 11 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர் கடும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. தனது மன உளைச்சலை போக்குவதற்காக வீட்டில் நாய்கள் பூனைகள் மற்றும் பறவைகளை வளர்த்து வந்திருக்கிறார்.