பெத்த மகள் உயிருடன் இருக்கும்போதே தாய் செய்த காரியம்!! பரபரப்பு சம்பவம்..
பெற்ற தாயே உயிருடன் வாழும் மகளுக்கு இப்படியா செய்வது! பரபரப்பு சம்பவம்..
காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகளான அபி பக்கத்து வீட்டில் இருந்த சந்தோஷை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் அமராவதிக்கு தெரியவரவே, அவர் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தங்கள் வீட்டிற்கு தெரியாமல் அபி சந்தோஷை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கோபமடைந்த அபியின் தாய், பெற்ற மகள் இறந்துவிட்டதாக கே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அடித்து ஊர் முழுக்க ஒட்டியுள்ளார்.
இந்த போஸ்டரை பார்த்த அபியின் கணவர் விசாரித்ததில், அமராவதி தான் போஸ்டர் அடிக்கச்சொன்னது தெரியவந்தது. இதனையடுத்து அபியின் கணவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரித்த போது, தங்களது விருப்பம் இல்லாமல் காதலனை திருமணம் செய்து கொண்டதால் இவ்வாறு செய்ததாக அமராவதி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.