சுஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தின் தற்போதைய நிலை! கண்ணீர் விடும் இயற்க்கை!
Mourning in the sujith cemetery
குழந்தை சுர்ஜித் உயிரிழந்துவிட்ட நிலையில் அவன் வசித்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் இன்று மழை பெய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்து நாட்களாக நடைப்பெற்ற மீட்பு பணியானது இறுதியில் தோல்வியில் முடிவடைந்தது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சிறுவன் சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அடக்கம் செய்யப்பட்டது.
இதனையடுத்து சுர்ஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றையதினம் முழுவதும் இணையத்தின் வாயிலாகவும் சிறுவன் சுஜித்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் கனமழை பெய்துவரும் நிலையில், சுஜித் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை தோட்டத்திற்கு சென்று பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில் சுஜித்தின் மரணத்திற்கு பொதுமக்கள் கண்ணீர் வடித்துவந்த நிலையில் தற்போது வானமும் தொடர்ந்து கண்ணீர் வடித்து வருகின்றது என கூறுகின்றனர்.