அடிக்கடி தகராறில் ஈடுப்பட்ட கணவன்-மனைவி! சமாதானம் செய்ய வந்த அண்ணனுக்கு ஏற்ப்பட்ட பரிதாபம்!
Murder
வேலூர் மாவட்டத்திழன் ரங்காபுரம் பூங்காவனத்தமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் - நிர்மலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் செல்வகணேஷ் மற்றும் நிர்மலா தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்ப்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ஒரு நாள் கணவன், மனைவியிடையே பயங்கரமான வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. அதனை அடுத்து நிர்மலா தனது அண்ணனிடம் நடந்தவற்றை பற்றி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து நிர்மலாவின் அண்ணன் சமாதனம் செய்ய சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவர் வந்து சமாதான வார்த்தைகள் பேசி கொண்டிருக்கும் போதே செல்வகணேஷின் உறவினர்கள் அவரை தாக்கியுள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் நிர்மலாவின் அண்ணன். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்து விட்டதாக கூறியுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்டவரில் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான செல்வகணேஷ், அவரது சகோதரி, சகோதரியின் கணவர் ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.