காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய காதலி! கடைசியில் வெளியான காதலனின் உண்மை முகம் - இளம் பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்.
Murder abinraj manisha
பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அபின்ராஜ்.இவர் மினி வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனிஷா என்ற இளம் பெண்ணை கடந்த ஜந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொள்வதாக கூறி மனிஷாவை வீட்டிலிருந்து அழைத்துச் சென்ற அபிராஜ் சொன்னப்படி திருமணம் செய்யாமல் உறவினர் வீட்டில் மனிஷாவை தங்க வைத்துள்ளார். அப்போது காதலர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு மனிஷா கர்ப்பமாகி யுள்ளார். அதன் காரணமாக இருவரும் உறவினர் வீட்டிலிருந்து வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு சண்டை முற்றி மனிஷாவின் வயிற்றில் அபின்ராஜ் குத்தியுள்ளார். இதனால் கர்ப்பம் களைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி அதிகாலை மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொற்றோர்களும் அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளனர். அதன் பிறகு அவரது உறவினர்கள் மனிஷாவின் செல் போனை பார்த்த போது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த செல்போனின் ஆடியோ பதிவில் தனது காதல் கணவனிடம் மனிஷா அழுத படி பேசியுள்ளார். கான்ஃப்ரன்ஸ் காலில் அபின்ராஜுடன் பழக்கத்தில் இருந்த அனிதா என்ற பெண் மற்றொரு முனையில் பேசியுள்ளார். அப்போது தனது நிலையை புரிந்து கொண்டு தனக்கு தாலி பிச்சை போடும் படி அனிதாவிடம் கெஞ்சி கதறி அழுதுள்ளார் மனிஷா.
இந்த ஆடியோவை கேட்ட மனிஷாவின் குடும்பத்தினர் அபின்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் அபின்ராஜை கைது செய்துள்ளனர்.