×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி என அனைவரையும் ஈவு ஈரக்கமின்றி கொலை செய்த மகன்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி என அனைவரையும் ஈவு ஈரக்கமின்றி கொலை செய்த மகன்.! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், கடந்த 2019-ஆம் ஆண்டு கணவன் ராஜ், மனைவி கலைச்செல்வி, மகன் கவுதம் ஆகியோர் ஏ.சி வெடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சொத்துக்காக இவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்துவிட்டு, ஏ.சி.வெடித்துவிட்டதாக இவர்களின் மூத்த மகன் கோவர்த்தனன் மற்றும் அவரின் மனைவி தீப காயத்ரி நாடகமாடியது தெரியவந்தது.

இதனையடுத்து கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகியோரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தாய், தந்தை மற்றும் தம்பி என அனைவரையும் ஈவு ஈரக்கமின்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கோவர்த்தனன், அவரது மனைவி தீப காயத்ரி ஆகிய இருவரும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் இருவருக்கும்  தலா 4 தூக்கு தண்டனை, தலா 2 ஆயுள் தண்டனை, தலா ரூ.3 லட்சம் அபராதம் விதித்து வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#murder case #judgement
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story