கல்விக்கட்டணம் செலுத்ததால் 3 நாட்கள் கொடுமை செய்த நிர்வாகம்.. நாகையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
கல்விக்கட்டணம் செலுத்ததால் 3 நாட்கள் கொடுமை செய்த நிர்வாகம்.. நாகையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!
கல்லூரி மாணவி கல்விக்கட்டணம் செலுத்ததால் 3 நாட்கள் வகுப்பறைக்கு வெளியே மாணவியை நிர்வாகம் நிறுத்தி வைக்க, மனமுடைந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் அமிர்தா தெருவில் வசித்து வரும் பெண்மணி சு. சுபாஷினி. இவர் அங்குள்ள SIR ISSAC NEWTON PHYSIOTHERAPY கல்லூரியில் முதல் வருடம் பயின்று வருகிறார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில், இவர் நடப்பு வருடத்திற்கான கல்வி கட்டணம் செலுத்த தாமதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இதனால் கல்வி கட்டணம் செலுத்தாமல் வகுப்பறைக்குள் வரக்கூடாது என தெரிவித்த கல்லூரி நிர்வாகம், அவரை வகுப்பறையின் வாசலில் தொடர்ந்து 3 நாட்கள் நிற்க வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்துபோன கல்லூரி மாணவி சுபாஷினி, நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் அறிந்த காவல் துறையினர், சுபாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், மாணவியின் தற்கொலையால் கொதித்துப்போன உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.