ஒருநொடியில் மாறிய சந்தோசம்.. கார் மோதி சிறுவன் பரிதாப பலி.. தந்தை இழந்த 6 மாதத்தில் துயரம்.!
ஒருநொடியில் மாறிய சந்தோசம்.. கார் மோதி சிறுவன் பரிதாப பலி.. தந்தை இழந்த 6 மாதத்தில் துயரம்.!
தந்தையை இழந்து தாயுடன் பாட்டி வீட்டில் வசித்து வந்த சிறுவன், கார் மோதிய விபத்தில் பலியான சோகம் நடந்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி, வடக்குப்பொய்கை நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரின் மனைவி சிவகங்கா. இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகியுள்ளது. தம்பதிகளுக்கு ஒன்றரை வயதுடைய சர்வின் ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2021 அக். 19 ஆம் தேதி உடல்நலக்குறைவால் மணிமாறன் உயிரிழந்துள்ளார். இதனால் கணவரின் மரணத்திற்கு பின்னர், சிவகங்கா வேளாங்கண்ணி மாத்தாங்காட்டில் உள்ள தாயின் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று பாட்டி மகேஸ்வரியிடம் சிறுவன் சர்வின் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது. அவ்வழியாக சென்ற கார் குழந்தையின் மீது மோதியுள்ளது. இதனால் தூக்கி வீசப்பட்ட சர்வின் தலையில் படுகாயத்துடன் துடித்துள்ளார்.
அவரை மீட்ட பொதுமக்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், மருத்துவர்கள் சர்வின் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக வேளாங்கண்ணி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.