தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.!
தனிகுடித்தனத்திற்கு ஆசைப்பட்டு, புகுந்த வீட்டிற்கு எமனான மருமகள்.. பாச பந்தத்தால் பறிபோன 3 உயிர்கள்.!
திருமணம் முடிந்த 7 மாதமாக தனிகுடித்தனத்திற்கு வற்புறுத்திய மருமகளின் விடாப்பிடி குணம் காரணமாக, பெற்றோரை பிரிய மனமில்லாத மகன், அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், எருமைப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ் (50), மனைவி பூங்கோடி (47). தம்பதிகளின் மகன் சுரேந்தர் (25), எலக்ட்ரீஷியனாக வேலை பார்க்கிறார்.
தனிகுடித்தனத்திற்கு அழைப்பு
வேட்டாம்பாடி கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண் சினேகா. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு, சினேகா - சுரேந்தர் தம்பதிக்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், சினேகா கணவரை தனிகுடித்தனத்திற்கு அழைத்துள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ செலவுக்கு பரிதவித்து, காதல் மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; கணவனும் தற்கொலை.!
தங்களின் பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளை என்பதாலும், பிள்ளையின் மீது பெற்றோர் வைத்த ஆசை காரணமாகவும், தனிகுடித்தனத்திற்கு சுரேந்தர் மற்றும் அவரின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் தினமும் சண்டை தொடர்ந்த நிலையில், நேற்று முன்தினம் சினேகா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மூவரும் தற்கொலை
மனைவியை கணவர் வீட்டிற்கு அழைத்துப் பார்த்தும் பலனில்லை. இதனால் விரக்தியடைந்த சுரேந்தர், தனது பெற்றோருடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் மருமகள் தனிகுடித்தனத்திற்கு விருப்பப்பட்டு, அதனை கணவரின் குடும்பத்தினர் ஏற்காதது தெரியவந்தது. இதனால் மருமகள் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்க்கு சென்றும் வராததால், குடும்பத்துடன் சுரேந்தர் விபரீத முடிவெடுத்தது அம்பலமானது.
இதையும் படிங்க: கணவனின் விபரீத எண்ணத்தால் மனைவி பலி., பிற உயிர்கள் ஊசல்.! கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்..!