தேர்தலுக்குப் பிறகு சினிமாவில் களமிறங்குவது உறுதிதா போல; வைரலாகும் சீமானின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ.!
namtamilar katchi - directer seeman - gym video
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் சீமான். இவர் இயக்கி நடித்த படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பறை பெற்றது. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக இவருடைய படங்கள் அமைந்தன. அவ்வகையில் வெளிவந்த மாயாண்டி குடும்பத்தார் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில் சில காலமாகவே திரைத்துறையிலிருந்து விலகி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் அவர் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இளையதளபதி விஜய்யை வைத்து பகலவன் என்ற பெயரில் புதிய படம் இயக்க இருந்தார். இந்நிலையில் அம்முடிவு கைவிடப்பட்டு அனிருத் இசையமைப்பில் சிம்பு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இயக்கவுள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இவரது ஜிம் வொர்க் அவுட் வீடியோ காட்சி தற்சமயம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.