மின்சாரமின்றி மக்கள் தவிக்கும் நேரத்தில், மின் அலங்காரத்தில் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
Nayanthara birthday
தமிழகத்தின் ஒரு பகுதியே கஜா புயலால் சூறையாடப்பட்டடு மக்கள் மின்சாரமின்றி இருளில் தவித்து வருகின்றனர். ஆனால் என் மக்களிடமிருந்து பெற்ற பணத்தில் மின்விளக்கு அலங்காரத்தில் பிறந்தநாள் கொண்டாடுகிறார் நயன்தாரா.
இன்று தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நயன்தாரா தானாம். அவர் வாழ்க்கையில் எத்தனையோ இண்ணல்கள், எத்தனையோ மனிதர்களை தாண்டி வந்தாலும் அவருக்கு மச்சம் உச்சத்தில் தான் இருக்குமாம். அதான் அவர் கூட ஒட்டிகிட்டு இருக்கவங்க கூட தமிழகத்தின் பிரபலங்கள் ஆயிடுறாங்க.
ஆனால் என்னதான் இருந்தாலும் தன்னை தூக்கிவிட்ட மக்களைப் பற்றியும் கொஞ்சமாவது யோசிச்சா நல்லாயிருக்கும். இதே சென்னையில புயல் வந்தா என் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லைனு அறிவிப்பு வந்திருக்கும். காரணம், சென்னையில் எதுவும் நடந்தால் மட்டும் தான் உலகத்திற்கு தெரியும்.
நயன்தாராவ கூட மன்னித்து விட்டுவிடலாம், வேற மாநிலத்து பொண்னு. ஆனால் கூடவே சுற்றுகின்ற நம்முடைய தமிழ் நெஞ்சங்களுக்கு கூடவா நம் மக்கள் சிரமப்படுவது தெரியவில்லை.
பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நாங்கள் கூறவில்லை; எம்மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆடம்பரம் இல்லாமல் கொண்டாடியிருக்கலாம். அப்படியே கொண்டாடியிருந்தாலும் இப்படி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு எங்கள் மனதை புண்படுத்ததாமல் இருந்திருக்கலாம்.
"மிஸ் நயன்தாரா உங்கள் நடிப்பின் மீது எங்களுக்கு மரியாதை இருக்கிறது; உடலின் மீது ஆசை அல்ல! அதற்கு உதாரணம் உங்கள் 'அறம்' படத்தின் மாபெரும் வெற்றி. எங்கள் மக்களின் மனதையும் புரிந்துகொள்ளுங்கள்". கூட இருக்கிறவங்களாவது எடுத்து சொல்லுங்க.