இளைஞர்களின் கனவுக்கன்னி நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்த பேரணி! அலைமோதிய கூட்டம்!
nayanthara participate womens day function
சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் பல்வேறு வகையில் இந்நாளை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணி நடைபெற்றது. பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பாதுகாப்பு தொடர்பான நடைபயண பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து வருமான வரித்துறை அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அங்கு நடந்த பேரணிக்கு பெண் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் நடிகை நயன்தாராவுடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பு நிற உடையில் ஸ்டைலாக வந்த நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.