தச்சு தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை... கள்ளக்காதலி வெறிச்செயல்... விசாரணையில் வெளியான உண்மை.! சம்பவம்!
தச்சு தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை... கள்ளக்காதலி வெறிச்செயல்... விசாரணையில் வெளியான உண்மை.! சம்பவம்!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கட்சி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்ணிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (55). இவர் ஊர் ஊராக சென்று தச்சு வேலை செய்து வந்தார் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நத்தம் தாலுக்கா சாணார்பட்டி அருகே உள்ள வலையப்பட்டிபுதூருக்கு கட்சி வேலைக்கு சென்றார் அப்போது ராஜமாணிக்கத்திற்கும் பாபு என்பவரது மனைவி பாப்பாத்தி (45) இன்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்காதல் ஜோடி வீட்டிலிருந்து வெளியேறி கன்னிமந்தயம் என்ற பகுதிக்கு அருகில் வசித்து வந்தனர். ராஜமாணிக்கம் தச்சு வேலைக்கும் பாப்பாத்தி கூலி வேலைக்கும் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ராஜமாணிக்கம் பிணமாக கிடந்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய விசாரணையில் அவரது கள்ளக்காதலி பாப்பாத்தி அந்த ஊரிலிருந்து மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவரது செல்போன் சிக்னலை வைத்து டிராக் செய்தபோது தனது சொந்த ஊரான வலையப்பட்டி புதூரில் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வலையப்பட்டி புதூர் சென்ற தனிப்படை போலீசார் அங்கு பதுங்கி இருந்த பாப்பாத்தியை கைது செய்தனர் . அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வீட்டை விட்டு ஓடி வரும் போது 50,000 ரூபாயை ராஜமாணிக்கத்திற்கு கொடுத்ததாகவும் அதை மது குடித்து செலவு செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.