நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் சங்கரநாராயணன் மகனுடன் கைது..!
நெல்லை கல்குவாரி விபத்து - உரிமையாளர் சங்கரநாராயணன் மகனுடன் கைது!...
நெல்லை கல்குவாரி விபத்தில் கல்குவாரியின் உரிமையாளர் சங்கரநாராயணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாறை சரிந்தது விழுந்ததால் கல்குவாரியில் நடந்த விபத்து காரணமாக, கல்குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பொன்னங்குடி அருகே உள்ள அடைமிப்பான் குளத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. அந்த கல்குவாரியில் உடைத்து வைத்து இருந்த கற்களை எம்.சாண்ட் தயாரிக்கும் பகுதிக்கு, லாரிகள் மூலம் எடுத்துச்செல்லும் வேலை நடந்து கொண்டிருந்தது.
நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய பாறை ஒன்று சரிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் 6 பேர் 300 அடி பள்ளத்தில் சிக்கியுள்ளனர். இத்தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 300 அடி பள்ளத்தில் இரண்டு லாரிகள் மற்றும் மூன்று ஜேசிபி இயந்திரம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
குவாரியில் பாறை விழுந்த பள்ளத்தில் ஆறு தொழிலாளர்கள் சிக்கி உள்ளதாகவும், அதில் இருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதி மூன்று பேர் உயிரிழந்ததாக விபத்தில் காயமடைந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் கூறியதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிக்காக தூத்துக்குடியிலிருந்து மிகப்பெரிய கிரேன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது. மேலும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்படுவதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கல்குவாரியின் உரிமையாளர் சங்கர நாராயணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கரநாராயணன் மற்றும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.