#BigNews: வணக்கமுங்கோ ஷீலாவை கைவிட்டு சென்ற காதல் கணவன் நெல்லை சங்கர்.. "இறுதி முடிவை தேடுகிறேன்" : ஷீலா பகீர் வீடியோ. !
#BigNews: வணக்கமுங்கோ ஷீலாவை கைவிட்டு சென்ற காதல் கணவன் நெல்லை சங்கர்.. இறுதி முடிவை தேடுகிறேன் : ஷீலா பகீர் வீடியோ. !
பிரபல டிக் டாக் புகழ் ஷீலாவை திருமணம் செய்த சங்கர், சில மாதங்கள் அவருடன் குடித்தனம் நடத்திவிட்டு குடிக்கு அடிமையாகி மனைவியை கைவிட்டு சென்றார். நான் தாய்வீட்டிற்கே செல்கிறேன் என ஷீலா வீடியோ பதிவிட்டுள்ள நிலையில், அவரின் நிலைமை என்னவாகும் என்ற சோகம் அவரின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
டிக் டாக் செயலியில் தனது "வணக்கமுங்கோ" என்ற வார்த்தையை தனது பாணியில் கூறி பிரபலமான பெண்மணி ஷீலா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தன்னைப்போல டிக் டாக்கில் பிரபலமான நெல்லை சங்கர் என்பவரை காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
தம்பதிகள் இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்த நிலையில், தங்களின் வீட்டில் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகளை வீடியோவாக பதிவு செய்து தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்து வந்தனர். சமீபத்தில் மதுபானம் அருந்தும் பழக்கத்திற்கு அடிமையான நெல்லை சங்கர், முழுநேர குடிகாரர் ஆனார்.
இதனால் வீட்டில் தினமும் சண்டை என இருந்து வந்த நிலையில், மனஉளைச்சலால் சாப்பிடாமல் இருந்த ஷீலா மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அப்போதும் சங்கர் தனது காதல் மனைவியை பார்க்க வரவில்லை. அக்கம் பக்கத்தினர் நீ தாய் வீட்டிற்கே சென்றுவிடு என ஷீலாவை கூறியும் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில், மனமுடைந்துபோன ஷீலா தனது தாயாரின் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில் பேசியுள்ள ஷீலா, "நீ என்னை ஏமாற்றிவிட்டாய். உன்னை நம்பி நான் ஏமார்ந்து போதும். சிறுவயதில் என்னை எனது தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அப்போதும் கூட புதிதாய் வந்த பாசம், சொந்தத்தை நம்பி நான் போய்விட்டேன்.
அதையும் தாண்டி நீதான் முக்கியம் என வந்தேன். வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் இருந்தபோதும் நீ வரவில்லை. நான் அம்மா வீட்டிற்கே செல்கிறேன். ஒவ்வொரு முறை உடல்நலக்குறைவால் அவதிப்படும்போதும் எனது தாய் நொடிபொழுது கூட என்னை பிரியாமல் பார்த்துக்கொள்வார். ஆனால், நீ என்னைவிட்டு எங்கேயோ சென்றுவிட்டாய்.
நீ என்ன செய்கிறாய் என்று கூட எனக்கு தெரியாது. நான் அம்மா வீட்டிற்கே செல்கிறேன். பலநாள் இங்குள்ளவர்கள் சொற்களை கேட்காமல் காத்திருந்தேன். எனது அம்மா என்னை ஏற்றுக்கொண்டால் நான் அவருடன் இருப்பேன். இல்லையென்றால் இறுதி முடிவை நான் எடுத்துக்கொள்கிறேன். குடியினால் பல குடும்பம் சீரழிந்துள்ளது. அதனை நானும் கண்களால் பார்த்திருக்கிறேன்.
திருமணம் ஆகிய புதிதில் உள்ளங்கையில் வைத்து தாங்கினாய். நீ என்னை தேட வேண்டாம். நானும் உன்னை தேடமாட்டேன். நான் கிளம்புகிறேன். நீ எதோ செய். என் சந்தோசம் அனைத்தும் பறிபோனது. என்னை நீ ஏமாற்றிவிட்டாய்" என்று கண்ணீர் மல்க தெரிவிக்கிறார். இதனால் அவர் தாய் வீட்டிற்கு செல்வாரா? அல்லது விபரீத முடிவு ஏதேனும் எடுத்திடுவாரா? என்ற அச்சம் அவரின் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.