#Breaking: விழுப்புரம் - திண்டிவனம் இடையே இரயில் சேவை தொடங்கியது; இரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கம்.!
#Breaking: விழுப்புரம் - திண்டிவனம் இடையே இரயில் சேவை தொடங்கியது; இரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கம்.!
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் இரயில், சாலை போக்குவரத்து ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் பகுதியில் கனமழை காரணமாக வராக நதியில் வெள்ளம் ஏற்பட்டு, அபாய அளவை தாண்டி வெள்ளம் சென்றது.
இரயில் போக்குவரத்து தொடக்கம்
அவ்வழியே இயக்கப்பட்டும் இரயில்கள் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பல இரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இரயில் சேவை மீண்டும் தொடங்கி இருக்கிறது. தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், விழுப்புரம் - திண்டிவனம் மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் இரயில்களை இயக்கும்போது, மணிக்கு 10 கிமீ வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலைய திக்., திக் காட்சிகள்.. புயல் மழைக்கு நடுவே தரையிறங்க முற்பட்டு, மீண்டும் பறந்த விமானம்..!
நன்றி: PuthiyathalaimuraiTV
வெள்ளம் குறைந்ததால் மிதமான வேகத்தில் இயக்க நடவடிக்கை
அதன்படி, திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இரயில் தண்டவாளத்தில் , பாலத்தின் அபாய அளவை மீறி வெள்ளம் சென்றதால், இரயில்கள் மேற்படி இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. சில இரயில்கள் காட்பாடி மார்க்கத்தில் மாற்றுவழியில் சென்னை நோக்கி திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது..
இதையும் படிங்க: Trending Video: கடலில் இருந்து நீரை உறிஞ்சும் பெஞ்சல் புயல்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ.!