வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடம் கொரோனா வார்டாக மாறுகிறதா! அச்சத்தில் 400 குடும்பங்கள்..!
New building changed as corona word
சென்னை கே. கே நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை கொரோனா வார்டாக மாற்றவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
சென்னை கே.கே நகர் போக்குவரத்துக்கழக பணிமனை மற்றும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ள 400 குடும்பங்களில் கிட்டத்தட்ட 1200 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் குடியிருப்புக்கு பக்கத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்ட 154 வீடுகளைக் கொண்ட எம்.ஐ.ஜி 3 குடியிருப்பில் மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கலாம் என்ற நோக்கில் ஆய்வு செய்துள்ளனர். ஒரு வேளை அந்த குடியிருப்புகள் அனைத்தும் கொரோனா சிகிச்சை வார்டாக மாறினால் சுற்றி உள்ள தங்களுக்கும் பாதிப்பு ஏற்ப்பட்டு விடுமோ என்று அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.