வந்தாச்சு புது ரூல்ஸ்..!! 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கடைகள் அடைப்பு!! எவற்றிற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ
தமிழகத்தில் இறுதி ஊர்வலம் முதல், திருமணம் வரை அனைத்திற்கும் புது கட்டுப்பாடுகள் விதிக்கப்ப
தமிழகத்தில் இறுதி ஊர்வலம் முதல், திருமணம் வரை அனைத்திற்கும் புது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழக்கம்போல் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். வரும் 6ம் தேதி முதல் இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
மெட்ரோ ரயில், தனியார், அரசு பஸ்கள், வாடகை டாக்சி போன்றவற்றில் 50 சதவீத பயணிகள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அனைத்துவிதமான உணவகங்களிலும் பார்சல் மட்டுமே பெற்றுச்செல்ல அனுமதி. மளிகை, பல சரக்கு மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இறைச்சி கடைகள் இயங்க தடைவிதிக்கப்படுகிறது. இதர நாட்களில், காலை, 6:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகிறது. இது தவிர, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.