தமிழிசை சவுந்தரராஜனுக்கு மேலும் கூடுதல் பொறுப்பு.! மகிழ்ச்சியுடன் தமிழிசை என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.?
புதுச்சேரி துணை நிலை கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பு ஏற்க உள்ளார்.
புதுச்சேரியில், கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.
இதற்கிடையே, தெலுங்கானா கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி மாநில கவர்னர் பொறுப்பையும் கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்தரராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானாவின் 2-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது நான் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் மொழி பிரச்சினை இல்லை தமிழ் எனது மொழி, எனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது தமிழ் என் பெயரில் மட்டுமல்ல என் உயிரிலும் உள்ளது என கூறியுள்ளார். மேலும், புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.