தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள்.!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை அதிகமான நிலையில், கடந்த மாதம் (மே) 24-ந் தேதி முதல் ஒ
தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை அதிகமான நிலையில், கடந்த மாதம் (மே) 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், 7-வது முறையாக ஊரடங்கை ஜூலை 5-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், மீதமுள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தநிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 2 மணி வரை அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7,00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், ஸ்டுடியோ, சலவை-தையல் கடைகள், அச்சகங்கள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். வாகன பழுதுபார்க்கும் மையங்கள், வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.