கொரோனா தடுப்பூசி போடலையா! இந்த 18 இடங்களுக்கு செல்ல தடை! விதிக்கபட்ட அதிரடி கட்டுப்பாடு!!
கொரோனா தடுப்பூசி போடலையா! இந்த 18 இடங்களுக்கு செல்ல தடை! விதிக்கபட்ட அதிரடி கட்டுப்பாடு!!
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பரவி கோரதாண்டவமாடியது. மேலும் இந்தியாவிலும் கொரோனா பரவி ஆட்டி படைத்தது. இந்நிலையில் வைரஸ் பரவாமல் கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
ஆனாலும் தற்போது வரை இந்தியாவில் கொரோனோ முற்றிலும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது ஓமைக்ரான் என்ற புதிய வகை கொரோனோ வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது தடுப்பூசி போடாதவர்கள் நியாய விலைகடை, ஹோட்டல், தங்கும் விடுதி, வர்த்தக நிறுவனங்கள், திருமண மண்டபம், திரையரங்குகள், சூப்பர் மார்க்கெட், கடை வீதிகள், துணிக்கடைகள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.