பள்ளி மாணவர்களுக்காக புது டிவி சேனல். அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!
New TV channel for school students
பள்ளி கல்வி துறையில் நாளுக்கு நாள் அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார் கல்வித்துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள். இதற்கு முன்னர் ஆங்கில வழி கல்வி, அரசு பள்ளிகளில் LKG , UKG வகுப்புகள் என பலவிதமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் அமைச்சர்.
இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பாக ,தொலைக்காட்சி சேனல் ஒன்று பொங்கல் முதல் ஒளி்பரப்பாக உள்ளதாகவும், இதற்காக 1.35 கோடி ஒதுக்கப்பட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8-வது தளத்தில் படப்பிடிப்பு நடந்துவருவதாகவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் தங்களுக்கு தேவையான பயனுள்ள தகவல்களை இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் கற்றுக்கொள்ள முடியும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு.