செல்போனில் ரகசிய பேச்சு... தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை.!!
செல்போனில் ரகசிய பேச்சு... தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை.!!
திருச்சி மாவட்டத்தில் புதிதாக திருமணமான ஜோடிகளிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் புது மாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுமண தம்பதி
திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர் சுபாஷ். 27 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமாரி(25) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை தொடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் செல்போன் பேச்சு காரணமாக இருவரிடமும் தகராறு ஏற்பட தொடங்கி இருக்கிறது.
செல்போனில் ரகசிய பேச்சு
சுபாஷ் தனது செல்போன் மூலம் வேறொரு பெண்ணிடம் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சுபாஷ் மற்றும் குமாரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. தனது கணவன் வேறொரு பெண்ணுடன் செல்போனில் பேசுவதை குமாரி கண்டித்து இருக்கிறார். ஆனாலும் இது குறித்து கவலைப்படாமல் தினமும் அந்த பெண்ணுடன் சுபாஷ் பேசி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: துயர சம்பவம்... வீடியோ கேம் விளையாட்டால் விபரீதம்.!! உயிரை மாய்த்துக் கொண்ட 15 வயது சிறுவன்.!!
தூக்கு போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று முன் தினமும் சுபாஷ் தனது செல்போன் மூலம் அந்த பெண்ணுக்கு பேசியிருக்கிறார். இது பற்றி தெரிந்த குமாரி தனது கணவருடன் தகராறு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட மன வருத்தத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார் சுபாஷ். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் கொடுமை... 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!