"ஐயா., உங்கவீட்டுப்பிள்ளையா நினைச்சி உதவி பண்ணுங்க" வீடுவீடாக உணவுகேட்டு கதவை தட்டும் காட்டெருமை... குன்னூரில் மக்கள் பரிதவிப்பு..!
ஐயா., உங்கவீட்டுப்பிள்ளையா நினைச்சி உதவிபன்னுங்க வீடுவீடாக உணவுகேட்டு கதவை தட்டும் காட்டெருமை... குன்னூரில் மக்கள் பரிதவிப்பு..!
மாலை & இரவு நேரங்களில் மக்களின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி காட்டெருமை உணவுகேட்கும் நிகழ்வு நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மலையில் தொடங்கி மலையிலேயே நிறைவுபெறும் மாவட்டம் ஆகும். இது வனத்தின் மீதே அமைந்துள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது எப்போதும் இருக்கும். காட்டெருமைகள், கரடி, யானை போன்றவை அவ்வப்போது வீடுகளுக்கு வருகைதந்து தங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்து செல்லும்.
இந்நிலையில், குன்னூர் பகுதியில் தனது பழைய வாழ்விடமான மக்களின் வீடுகளுக்கு வருகை தரும் காட்டெருமை ஒன்று, வீடுவீடாக சென்று மக்களிடம் உனவு கேட்டு கதவை தட்டி வருகிறது. இது பொதுமக்களுக்கு லேசான அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. யாரோ கதவை தட்டுகிறார்களே என கதவை திறக்காமல் ஜன்னல் வழியே பார்த்தவர்களுக்கு காட்டெருமை சர்பிரைஸ் கொடுத்துள்ளது.
சில மக்கள் தங்களின் வீடுகளில் இருக்கும் உணவுகளை காட்டெருமைக்கு சாப்பிட கொடுக்கின்றனர். உணவை சாப்பிட்டதும் காட்டெருமையும் அமைதியாக அங்கிருந்து செல்கிறது. ஆனால், பலரும் காட்டெருமையை கண்டு அச்சப்படுவதால், அவர்கள் பயத்தில் செய்யும் நடவடிக்கை அதற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தினால் விபரீதம் நிகழ்ந்துவிடும். ஆதலால், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.