தோல்வியால் கேலி, கிண்டல்.. கத்தியை எடுத்த அதிமுக வேட்பாளரின் கணவரால் பலியான திமுக ஆதரவாளர்.!
தோல்வியால் கேலி, கிண்டல்.. கத்தியை எடுத்த அதிமுக வேட்பாளரின் கணவரால் பலியான திமுக ஆதரவாளர்.!
தோல்வியுற்ற வேட்பாளரை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த வேட்பாளரின் கணவர், திமுக ஆதரவாளரை படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தேவர்சாலை பேரூராட்சி 10 ஆவது வார்டில், அதிமுக சார்பில் கணியம்வயல் பகுதியை சேர்ந்த நவுசாத் என்பவரின் மனைவி ஷிம்ஜித் வேட்பாளராக களமிறங்கினார். இவரை எதிர்த்து திமுக சார்பில் பெண் வேட்பாளர் எமிபோல் போட்டியிட்ட நிலையில், அவர் வெற்றியை அடைந்தார்.
ஷிம்ஜித் சம்பவ நேரத்தில் தனது வீட்டு முன்பு நின்றுகொண்டு இருந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் திமுக தொண்டர் சமீர் (வயது 46), ஷிம்ஜித் தோல்வியடைந்தது தொடர்பாக கிண்டல் செய்திருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக ஷிம்ஜித் தனது கணவர் நவுஷாத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நவ்ஷாத் சமீரிடம் சென்று வாக்குவாதம் செய்யவே, கத்தியை வைத்து சரமாரியாக சமீரை குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த அஸ்கர் (வயது 38) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் சமீர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தேவர்சோலை காவல் துறையினர், சமீரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அஸ்கரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவான நவ்ஷாத்தை தேடி வருகின்றனர்.