×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசிரியர்கள் அப்படி எதைத்தான் கேட்டு போராடடுகிறார்கள்? முழு விவரம்!

Nine major expectations jacto geo what they are

Advertisement

தமிழ்நாட்டில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாததால், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வு நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்கள் இவ்வாறு செய்வது அணைத்து தரப்பு மக்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் ஏன் போராடுகிறார்கள்? அப்படி அவர்கள் என்னதான் கேட்கிறார்கள்? வாங்க பாக்கலாம்.

2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊழியர் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தைக் கைவிட்டு,  அதற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஜாக்டோ ஜியோ அமைப்பின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு தொழிலார்கள், அங்கன்வாடி தொழிலார்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்க்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அரசு துறைகளில் ஆட்குறைப்பு நடவடிக்கை செய்ய வழிவகுக்கும் அரசாணை 56-ஐ உடனே ரத்து செய்யவேண்டும் என்பதும் இவர்களது முக்கியமான கோரிக்கையா உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளை கல்வித்துறை மூடி வருகிறது. அதனை உடனே தடுத்து நிறுத்தி  5 ஆயிரம் அரசுப் பள்ளிக‌ளை மூடுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுமட்டும் இல்லாது, 3500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு‌ மையங்களை மூடும் முடிவையும் அரசு கைவிட வேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jacto geo #teachers protest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story