நிவர் புயல் எதிரொலி: பேருந்து போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக மாவட்டம் நிர்வாகம் முடிவெடுக்கும். அதிகாரிகள் தகவல்
நிவர் புயல் காரணமாக பேருந்து போக்குவரத்தை நிறுத்துவது குறித்து அந்த அந்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக பேருந்து போக்குவரத்தை நிறுத்துவது குறித்து அந்த அந்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவான நிவர் புயலாக மாறுகிறது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமானது முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நிவர் புயல் வரும் 25ஆம் தேதி பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் எனவும், புயல் கரையை கடக்கும்போது 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலுவான புயல் மற்றும் கனமழை ஆகியவரை சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புயலின்போது பேருந்து போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக அந்த அந்த மாவட்டம் நிர்வாகம் முடிவெடுக்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலின் தாக்கத்தை பொறுத்து ஒவொரு மாவட்டம் நிர்வாகமும் பேருந்து போக்குவரத்தை அனுமதிப்பது அல்லது நிறுத்துவது குறித்து முடிவெடுக்கலாம் என தெரிகிறது.