காசிமேடு கடற்கரையில் தாண்டவமாடும் கடல் அலை.. கரைக்கு திரும்ப படாத பாடுபடும் படகு.. வைரல் வீடியோ..
நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கரைக்கு திரும்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
நிவர் புயல் கரையை நெருங்கும் நிலையில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகு ஒன்று கரைக்கு திரும்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறி தற்போது அதிதீவிர நிவர் புயலாக மாறியுள்ளது. தற்போது புதுவையில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ளது. மேலும் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்துவருகிறது.
நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் மாமல்லபுரம் இடயே கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும் எனவும், யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னதாக மீன் பிடிக்கச்சென்று கரைக்கு திரும்பும் காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் படகு ஒன்று புயலால் ஏற்பட்ட அலையின் சீற்றம் காரணமாக கரையை நெருங்க மிகவும் சிரமப்படுகிறது.
படகு அலையில் சிக்கித் தவிக்கும் வீடியோ தற்போது வெளியாகிக் காண்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ.