×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு! மகிழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள்!

no caste no religion in TC

Advertisement


வருவாய்த்துறை மூலமாக சாதி சான்றிதழ் வழங்கப்படுவதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் தனியாக சாதி பெயரை குறிப்பிட வேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்  படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்புகளில் சேருவதற்கோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வெளியே செல்லும்போது அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் (TC) வழங்கப்படுகிறது. அதில் மாணவரின் பெயர், சாதி, மதம், தேர்ச்சி பெறுவதற்கு உகந்தவரா, நன்னடத்தை சான்று போன்ற பல்வேறு விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்நிலையில், மாற்றுச்சான்றிதழ் வழங்கும்போது, அதில் மாணவரின் ஜாதியை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள வருவாய்த்துறை மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் சாதிச்சான்றிதழ் தனியாக வழங்கப்பட்டு வருவதால், மாற்றுச்சான்றிதழில் மாணவரின் சாதியைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது மாணவரின் பெற்றோர், பாதுகாவலர் விருப்பப்பட்டால் சாதி இல்லை , மதம் இல்லை என்று குறிப்பிட்டு மாற்றுச்சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#TC #caste #religion
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story