ஆன்லைனில் வகுப்பு எடுக்க கூடாது! எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செங்கோட்டையன்!
No online class to private schools
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் நான்காவது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மதத்தில் இருந்தே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறையாத நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து வகுப்புகளை நடத்துவது சிரமமாக இருக்கும் என்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி துறை பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 1ந்தேதி முதல் ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.